முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனம் அருகே வந்த புலி - வீடியோ வைரல்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தின் அருகே புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தில் அருகே புலி செல்லும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. புலிகள் காப்பகம் சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் டிரக்கிங் அழைத்துச் சென்று வனப்பகுதியையும், வன விலங்குகளையும் காண்பித்து வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல சுற்றுலா பணிகள் தெப்பக்காடு வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற போது புலி ஒன்று வாகனத்தின் மிக அருகிலேயே கம்பீரமாக நடந்து சென்றது.



இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.



இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...