திருப்பூரில் தமிழக - வடமாநில தொழிலாளர்கள் மோதல் சம்பவம் - பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது

திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் கடந்த 26 ஆம் தேதி தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ முற்றிலும் வதந்தி எனவும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எனவும், அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் தவறாகப் பதிவிடுவோர் மீதும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருப்பூர் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்காக இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம்(27) என 2 பேரை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...