கோவையில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு!

கோவை சின்னவேடம்பட்டியில் குடும்பத் தகராறில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் குடிபோதையில் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மலர்விழி (48). இவரது மகளை நாகராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மருமகன் நாகராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மீண்டும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மாமியார் மலர்விழி தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாகராஜ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மலர்விழியை நாகராஜ் கடுமையாக தாக்கி அவதூறாக பேசியதோடு வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மீண்டும் அவரை கொடூரமாக தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மலர்விழி மயங்கினார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மலர்விழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் மருமகன் நாகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...