கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

கோவை இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.


கோவை: இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் நடைபெற்ற சாலை விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் இடையர்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதி பொன்னையா திருமண மண்டபம் அருகே வந்த போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், சதீஷ் வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சதீஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...