மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வாகனங்களால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க 5 இடங்களில் வனத்துறையினர் வேகத்தடை அமைப்பு.



கோவை: மேட்டுப்பாளையம் - உதகை வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தினை கடந்து இரண்டு வனச்சாலைகளின் வழியே பயணித்து தான் நீலகிரி மாவட்டம் செல்லமுடியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் சாலை ஆகிய இரண்டு வன சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலைகளில் அடிக்கடி வன உயிரினங்களான காட்டுயானை, மான், சிறுத்தை, காட்டு எருமை, குரங்கு உள்ளிட்ட பல வன சாலைகளை கடந்து வனப்பகுதிக்கு செல்ல முடியும்.

அப்படி சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகளவில் நடக்கிறது.



குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்கவும், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஓடந்துரை பகுதியில் இருந்து தூரிப்பாலம் வரை சுமார் 5 இடங்களில் வேகத்தடைகளை அமைந்துள்ள வனத்துறையினர் மேற்கொண்டு வனச்சாலையில் அதிவேகமாக வந்து வன உயிரினங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...