தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் ராட்சத முதலை - பொதுமக்கள் பீதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாளக்கரை அமராவதி ஆற்றில் வரும் ராட்சத முதலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்கு துணி துவைக்க சென்றபோது பார்த்துள்ளார்.

உடனே தனது கையில் இருந்த மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று மாதங்களாக அமராவதி ஆற்றில் சீதக்காடு என்ற இடத்தில் இரண்டு முதலைகளும், கன்னிவாடி பேரூராட்சி மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் ஒரு முதலையும் இருந்து வருகிறது.



இந்த முதலைகள் பிடிபடாமல் இருந்து வரும் நிலையில், தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட முதலை இருப்பது பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...