பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு - தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு நாளை முன்னிட்டு தாராபுரத்தில் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

3 ஆயிரத்து 3500 கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது.



ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு நாளை ஒட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில், சர்ச் சாலையில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பாதை யாத்திரையாக வந்து பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலையை வந்து அடைந்தனர்.



அங்கு அண்ணல் காந்தியடிகளாரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மூன்று நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு காங்கிரஸ் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



அதன் பிறகு மாவட்ட தலைவர் தென்னரசு கூறுகையில், 3,500 கிலோ மீட்டரை 136 நாட்கள் கடந்த இளம் தலைவர் ராகுல்காந்தி. பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவு செய்துள்ளார். இது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்திய ஒற்றுமையை உணர்த்துகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...