தாராபுரத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நகர அரிமா அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது ஜெம் மருத்துவமனை சார்பில் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு குழாய், குடல் இறக்கம், பித்தப்பை, கற்கள், குடல் புண், மலக்குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.



இந்த முகாமில் 320 பேர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பரிசோதனை முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அப்போது தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் கந்தசாமி மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார் சிவக்குமார், ஆயுமுத்து, ரத்தினம் சாரதா, சண்முகவேல், கோபாலகிருஷ்ணன், வட்டார தலைவர் தங்கவேல், ஆலோசனை குழு உறுப்பினர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...