கோவை சிம்பிளிசிட்டி நிறுவன செய்தியாளர் மீது காவலர் தாக்குதல் - கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

கோவையில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிய சிம்பிளிசிட்டி செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் லட்சுமணனை கடுமையாக தாக்கி, தகாத முறையில் நடந்துகொண்ட போலீஸ் காவலர் அராபத் அலி மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்.



கோவை: நேற்று (ஜனவரி 30) கோவை ஈச்சனாரி அருகே நமது மூத்த வீடியோ பத்திரிகையாளர் லட்சுமணனுக்கு காவலர் ஒருவரால் இழைக்கப்பட்ட கொடூரத்தை சிம்ப்ளிசிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. பொது மக்கள் - காவல்துறை பிணைப்பு என்பதன் அவசியத்தை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் நம் மாநகர் காவல் ஆணையர் கே. பாலகிருஷ்ணன் இந்த அராஜக சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

கோவையில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் லட்சுமணன், நேற்று பணி முடிந்து ஈச்சனாரி அருகே சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்து நிறுத்தி தகாத முறையில் பேசி, தாக்கிய காவலர் அராபத் அலி என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோயமுத்தூரில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருபவர் லட்சுமணன். ஆரம்ப காலத்தில், சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய லட்சுமணன், தற்போது சிம்பிளிசிட்டி இணைய ஊடகத்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் லட்சுமணன், கோவை ஈச்சனாரியில் நடந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நிகழ்விற்கு சென்று விட்டு ஈச்சனாயிலிருந்து, கோவை மார்க்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, வரும் வழியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர் என் ரவி வாகனம் செல்வதால் (கான்வாய்), சாலையில் செல்லும் வாகனங்களை, பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் நிறுத்தினர். அப்போது லட்சுமணன் தன்னுடைய வாகனத்தையும் சாலையின் ஓரமாக நிறுத்தியிருக்கின்றார். வண்டி ஆனில் இருந்திருக்கின்றது.

சிறிது நேரத்தில், தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர் என் ரவி வாகனம் சென்ற பிறகு, அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், பத்திரிகையாளர் லட்சுமணனின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்திருக்கின்றார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.



பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு காவலர் அராபத் அலி, என்பவர் ஒருமையில் பேசியவாறு லட்சுமணனை கடுமையாக தாக்கியிருக்கின்றார்.

இதுகுறித்து சகப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காவலர் அராபத் அலி "நான் காவல்துறை... உன்னால் என்ன செய்ய முடியும்? முடிந்ததை பார்த்துக்கொள்" என்று ஒருமையில் தெரிவித்திருக்கின்றார். இது à®…ங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பின்னர், பத்திரிகையாளர் லட்சுமணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை காவலர் பறித்து சென்றிருக்கிறார். இந்த செயலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.



சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் லட்சுமணன், தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்துள்ளார்.



வாகனத்தின் சாவியை பறித்து, தன்னை கொடூரமாக பொதுவெளியில் தாக்கி கடும் சொற்களால் வசைபாடிய காவலர் அராபத் அலி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கோரியுள்ளார்.



அதனடிப்படையில், பத்திரிக்கையாளர் லட்சுமணன் அவர்களை கடும் சொற்களால் வசைபாடி, தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் அராபத் அலி மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். "காவல் துறை உங்கள் நண்பன்" என்ற சொல்லை செயலால் நிறுவி, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரான லட்சுமணன் அவர்களுக்கு காவல் துறை உரிய நீதி பெற்று தர வேண்டும்.

காவலர் அராபத் அலி தனது இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கின்றது. காவலர் அராபத் அலியின் அராஜக போக்குக்கு உள்ளான பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்களுக்கு, உரிய நீதி கிடைக்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் அவருக்கு உறுதுணையாக உடன் பயணிக்கும்.

உரிய நீதி கேட்டு அனைத்து பத்திரிகைகாளர்களையும் ஒன்றிணைத்து கோயமுத்தூர் பத்திகையாளர் மன்றம் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக இருப்பதனை தெரிவித்திருக்கொள்கின்றோம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...