'கொரோனா காலத்தில் மதங்களை கடந்து மனிதநேயம் வெளிப்பட்டது..!' - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதம்

கோவையில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாளையொட்டி நடைபெற்ற மத நல்லிணக்க கருத்தரங்கில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மனிதநேயம் அதிகரித்துள்ளது என்றார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 75 வது நினைவு நாளை முன்னிட்டு மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.



கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டல் அரங்கில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.



பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமை உரையில், மத நல்லிணக்க பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மனித நேயத்திற்கும் காந்திய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுகிறது என்றார்.

இதேபோல், கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மதங்களை கடந்து மனிதம் பேசும் மனிதநேயத்தை கொரோனா கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொண்டனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மனித நேயம் அதிகரித்துள்ளது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் குணசேகரன், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...