பல்லடம் அருகே சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழந்த சோகம்!

பல்லடம் அடுத்த நான்கு முனை சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது டாடா ஏசி வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து காவலர் ராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் போக்குவரத்து காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சேதுநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராஜராதன்யா மற்றும் மகன் சபரிவாசன் ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவலர் ராதா இன்று காலை 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நான்கு முனை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பொங்கலூர் நோக்கி சென்ற டாட்டா ஏசி வாகனம் காவலர் ராதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் ராதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார், ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...