பீளமேடு பகுதியில் ரூ,16 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு

கோவையில் பிளமேட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்பார்மர் நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.14.60 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்.


கோவை: பீளமேடு கே.ஆர்.புரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ரூ. ரூ.14.60 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு கே.ஆர்.புரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல இரவு பணி முடிந்து பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல காவலாளி வந்து பார்த்த போது தொழிற்சாலையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது தொழிற்சாலையில் இருந்து சுமார் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான 1,440 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தொழிற்சாலையின் பொதுமேலாளர் வரதராஜன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். முன்னதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...