கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு

கோவை வைசியால் வீதியில் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டு செயினை பறித்துச் சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.


கோவை: கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியவதி (63). இவர் நேற்று மாலை டவுன்ஹாலுக்கு பேருந்தில் வந்து கோவிலுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றார்.

அப்போது வைசியால் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பாக்கியவதியிடம் இரண்டு பெண்கள் வந்து உக்கடம் செல்லும் பேருந்து எங்கே வரும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்து பாக்கியவதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்கள் உட்பட நான்கு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...