தாராபுரம் குண்டடத்தில் ‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டணம் - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் அடுத்த குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 8 மாதமாக மின்கணக்கீடு செய்யப்படாமல், தற்போது கணக்கீடு செய்யப்பட்டதால் ரூ.1,500 முதல் ரூ.32,000 வரை மின் கட்டணம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே 8 மாதமாக அதிகாரிகள் மின் கணக்கீடு செய்யாததால் பொதுமக்களுக்கு மின் கட்டணமாக 32,000 ரூபாய் வரை வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த குண்டடம் வடக்கு மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி கணக்கீட்டாளர் சக்கரவர்த்தி என்பவர் மின் கணக்கீடு செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் மாதம் ரூ.60, ரூ.100, ரூ.350,ரூ.500 என்று மின்சார கட்டணம் செலுத்தி வந்த கிராம பொதுமக்களுக்கு, தற்போது ரூ.1,500 முதல் ரூ.32,000 வரை மின்சார கட்டணம் வந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக கணக்கீட்டாளர் கணக்கெடுக்காமல் இருந்ததை கண்காணிக்க தவறிய கணக்கிட்டு ஆய்வாளர், வருவாய் மேற்பார்வையாளர், உதவி மின் பொறியாளர், மதிப்பீட்டு அலுவலர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



மேலும், அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய விசாரணை நடந்து முடியும் வரை எந்த ஒரு மின் நுகர்வோரின் மின் இணைப்பும் துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டடம் டவுன், சங்கபாளையம், முத்தனம்பட்டி, அம்மாபாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், ராமநாதபுரம், கத்தாங்கண்ணி, செவத்தம்பட்டி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், ருத்ராவதி, புதுருத்ராவதி, இடையபட்டி, கரைப்பாளையம், கொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் முறையாக கணக்கீடு செய்யப்படவில்லை.



மின்வாரியத்துறை அதிகாரிகள் செய்த தவறை மறைப்பதற்காக பொது மக்களிடம் பேரம் பேசி தொகை வசூல் செய்யும் மின்சார துறையை கண்டித்து பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...