ஜம்மு காஷ்மீர் செல்லும் 'தளபதி 67' படக்குழு - வீடியோ, புகைப்படம் வைரல்

விஜய், திரிஷா உள்பட தளபதி 67 படக்குழுவினர் சென்னையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



சென்னை: மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய் - லோகேஷ் இணையும் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டர் நேற்றைய தினம் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினரால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.



அந்த போஸ்டரில், நடிகர் விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-ம் கையில் காப்புடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும் அதில் தொழில்நுட்ப குழுவினர் பெயர்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், தளபதி 67 படக்குழுவினர் சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஜம்மு காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்காக பிரத்யேக பயணம் மேற்கொண்டுள்ளனர்.



இதற்காக நடிகர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும், தளபதி 67 படக்குழுவினர் பயணிக்கும் விமானத்தில் பயணிகள் பட்டியலும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...