கோவை சூலூரில் பணிச்சுமை காரணமாக போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி - பரபரப்பு..!

சூலூர் அருகே பணிச்சுமை காரணமாகவும், விருப்ப ஓய்வு தராமல் இழுத்தடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து கழக ஊழியர் ரமேஷ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பணிச்சுமை காரணமாக போக்குவரத்து கழக ஊழியர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 28 ஆண்டுகளாக முதுநிலை தொழில்நுட்ப பணியாளராக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார்.



சாய்பாபா காலனியில் உள்ள தலைமை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ், இரவு பணிகளில் மட்டுமே அதிகம் பணியாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக மற்ற சக பணியாளர்கள் இவர் இரவு பணி நேரத்தில் மட்டும் வேலைக்கு வருவதாக தலைமை கோட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை செய்யாமல் ரமேஷை சூலூர் கிளை போக்குவரத்து கழகத்திற்கு பணி மாறுதல் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த ரமேஷ், கடந்த மாதம் சூலூர் கிளையில் நான்கு நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துவிட்டு விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நேற்று மீண்டும் பணிக்கு வருவதற்காக சூலூர் கிளை மேலாளரிடம் செல்போனில் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேலாளர் ரமேஷை கடுமையாகத் திட்டியதாகவும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள மருந்தகத்தில் எலி மருந்தை ஒன்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு வந்துள்ளார்.

அப்போது அவர் வாந்தி எடுத்ததால், அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை, பேருந்தில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ரமேஷ்-க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...