பல்லடத்தில் விபத்தில் போக்குவரத்து காவலர் பலி - சொந்த ஊருக்கு சென்ற சடலம்!

பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலர் சடலத்துக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்து காவலரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.



திருப்பூர்: பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து பிரிவு காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்தார்.

விருதுநகர் மாவட்ட சேது நாராயண புரத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு ராஜ ராதன்யா என்ற மனைவியும், சபரி வாசன் என்ற மகனும் அவரது சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நான்கு முனை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்ற போது பொங்கலூர் நோக்கிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் காவலர் ராதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்ததால் பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காவலர் ராதா உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.



சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ராதாவின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் மற்றும் காவல்துறையினர் பல்லடம் மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

காவலர் ராதாவின் குடும்பத்தாருக்குக் காவல் கண்காணிப்பாளர் ஆறுதல் தெரிவித்து,பணியின்போது காவலர் ராதா உயிரிழந்ததால் தமிழக அரசு வழங்கும் ஈம சடங்கு நிதி 50,000 ரூபாய் தொகையை ராதாவின் குடும்பத்தாரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.

இறுதி மரியாதை செலுத்திய பின்பு காவலர் ராதாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான விருதுநகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவலர் ராதாவின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தார் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைத்து காவலர்களையும் பொது மக்களையும் கண்கலங்க வைத்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...