கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டிய வழக்கறிஞர் கைது!

கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை காந்திபார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35) வழக்கறிஞர். கடந்த 10 நாட்களுக்கு முன் செந்தில்குமாருக்கு அவரது மனைவி சவுமியாவிற்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக பேரூர் போலீசார் சவுமியாவை கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தாயகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் சவுமியா பாதுகாப்பு கருதி அதே இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் இல்லத்திற்கு வந்த செந்தில்குமார் காப்பக இல்லத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் மற்ற பெண்களை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து காப்பகத்தின் செயலாளர் லெலிமேரி சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் செந்தில்குமாரை அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...