'ஆளுநர் தமிழிசைதான் எனது ரோல் மாடல்..!' - பாஜகவில் இணைய உள்ளதாக தாடி பாலாஜி மனைவி தகவல்

தனி பெண்ணாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை முன் உதாரணமாக கொண்டு, மிக விரைவில் பாஜகவில் இணைந்து பொது பணி செய்யப் போவதாக விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மனைவி தகவல்.


சென்னை: தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்பவருடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

நித்யா தனது குழந்தையுடன் சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். அண்மையில் நித்யாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது காரை நித்யா சேதப்படுத்தியுள்ளதாகக் கூறி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்தனர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில் செய்தியாளர்களிடம் நித்யா கூறியதாவது:

தனியாக வாழும் பெண்கள் குறித்து நிறைய கேள்விகள் உலா வருகின்றன. நாங்கள் எல்லாம் நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா? தவறான முறையில் தான் சம்பாதிப்போமா? அதனால் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் நான் பேசுகிறேன்.

நான் தனிப்பட்ட முறையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்ததால், இனி வரும் பெண்கள் அதைச் சந்திக்கக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் மேம்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அப்படி ஆசைப்பட்டு சாதித்தவர்கள் வரிசையில் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். அவர் எனக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷன். அதனால் பெண்கள் மேம்பட மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாஜகவில் இணையவுள்ளேன்.

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் தனது இல்லம் முன்பு முன்று தினங்களுக்கு முன்பு ஒரு கார் இருந்தது உண்மை. ஆனால் அந்த காரின் மீது தான் கல்லால் தாக்கியதாகவும் தனது கீ சைன் மூலம் கிறுக்கி விட்டதாகவும் தான் வழக்கு.

இதுதொடர்பான மூன்று வினாடி கொண்ட வீடியோ வைத்து தன்மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாதவரம் ஆய்வாளர் சிவசங்கர், உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...