கோவையில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

குனியமுத்தூர் - பாலக்காடு சாலையில் நள்ளிரவில் வந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த 5 இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை.



கோவை: கோவை குனியமுத்தூர் அருகே நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் - பாலக்காடு பைபாஸ் சாலையில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த எஃப்ஜெட் மற்றும் டியோ இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், இரண்டு வாகனங்களில் பயணித்த 5 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதனையடுத்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்த இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...