ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிப் பெறப்போவது அதிமுகதான்..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம். வெற்றி பெறப் போவதும் நாங்கள் தான். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய தேதிக்குள் வேட்பாளரை அறிவிப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்.


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தயபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை திமுகவிற்கு முடிவெழுதும் வகையில் தான் முடிவு இருக்கும். மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு திட்டமும் திமுக அரசு கொடுக்கவில்லை. தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டு மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது.

இந்த தேர்தல் அவர்களுக்குப் தக்க பதிலடி கொடுக்கும். அதன் எதிரொலி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும். அமைச்சர்கள் கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, நேரு, ரகுபதி, ஐ பெரியசாமி ஆகியோர் ஊழல்வாதிகள், அவர்கள் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதை ஏன் திமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தனது சொந்த பிரச்சனையை வைத்துப் பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதை மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். எந்த நீதிமன்றத்துக்குச் சென்றாலும் பொய் வழக்கை எதிர்கொள்வேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம். வெற்றி பெறப் போவதும் நாங்கள் தான். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய தேதிக்குள் வேட்பாளரை அறிவிப்போம். போலி வாக்காளர் அடையாள அட்டையைத் தயாரித்து அதன் மூலம் பூத்தை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...