உதகையில் தனியார் விடுதியில் விபச்சாரம் - புரோக்கர் உட்பட மூவர் கைது!

உதகை அருகே தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், புரோக்கர் உட்பட மூவரை கைது செய்து விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் தங்கும் விடுதியில் சட்டவிரோதமாக பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் தங்களிடம் அழகிகள் உள்ளதாகவும், விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் லாட்ஜ்க்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த நான்கு அறைகளில் 2 அறையில் இரண்டு அழகிகள் அரை குறை ஆடையுடன் இருந்ததை விவசாயி பார்த்துள்ளார். பின்னர், தன்னிடம் போதிய பணம் இல்லை, அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அவர் உதகை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கரான தென்காசியை சேர்ந்த சையது அலி (43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்தனர்.

உதகை நகர பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பல் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...