கோவை மாவட்டத்தில் பிப்.1 முதல் 28 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

கோவை மாவட்டத்தில் 15 வட்டாரங்களிலும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம், பிப்.1 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


கோவை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவமான அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பயனாளிகள் தேர்வு செய்தல் போன்றவை நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் அனைத்தும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை நடைபெறும். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களது 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

அதன்படி, பேரூர் ஒன்றியம்- குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 1ம் தேதி, கோவை நகரம்- டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பிப்ரவரி 3ஆம் தேதி, கிணத்துக்கடவு ஒன்றியம்- கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 6ஆம் தேதி,

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம்- நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பிப்ரவரி 8ஆம் தேதி, அன்னூர் ஒன்றியம்- அன்னூர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 9ம் தேதி, காரமடை ஒன்றியம்- மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 10ஆம் தேதி,

சுல்தான் பேட்டை ஒன்றியம்- சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 13ஆம் தேதி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்- பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 15ஆம் தேதி, சர்க்கார் சாமகுளம் ஒன்றியம்- சர்க்கார் சாமகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 17ஆம் தேதி,

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்- பாலக்காடு சாலை பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்ரவரி 20 ஆம் தேதி, ஆனைமலை ஒன்றியம்- ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 22 ஆம் தேதி, சூலூர் ஒன்றியம்- சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 23ஆம் தேதி,

தொண்டாமுத்தூர் ஒன்றியம்- தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 24ஆம் தேதி, மதுக்கரை ஒன்றியம்- மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பிப்ரவரி 27ஆம் தேதி, வால்பாறை ஒன்றியம்- வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்ரவரி 28ஆம் தேதி ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...