உடுமலை அருகே சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் - அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மாற்ற கோரிக்கை

உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்துள்ள மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை-தாராபுரம் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் கான்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், எப்போது விழுமோ என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.



அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...