கோவையில் வங்கி ஊழியர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பேரூர் அருகே வங்கி ஊழியர் அர்ஜுன் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (31). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள வீட்டில் அர்ஜுன் மனைவி மற்றும் தாய் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, சேலத்தில் உள்ள அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இருவரும் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...