நீலகிரி சோலூர் பேரூராட்சியில் ரூ.28.45 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் 73 பயனாளிகளுக்கு ரூ.28.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


நீலகிரி: சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊரட்டி கிராம சமுதாயக் கூடத்தில் மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண உதவித்தொகையும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை,

முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 20பயனாளிகளுக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளையும்,



தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.31 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.32 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பில் உதவித் தொகையினையும்,



மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50,000 இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்திரத்தினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,



மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5.30லட்சம் மதிப்பில் இரும்பு பட்டறைக்கான தொழில் கருவி மற்றும் தச்சு வேலை புரிவதற்கான கருவிகளையும், சோலூர் பேரூராட்சி சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,௬௭௦ மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும்,



வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.16,000 மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரத்தினையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துகள் என 73 பயனாளிகளுக்கு 28.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...