வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்த ஒருவர் கைது மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவு.


கோவை: வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு,செயற்பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டம் நடந்தது கொண்டு இருக்கும்போது கூட்டத்தில் அத்துமீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். இதனால் நகர மன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



பின் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு அரசுப் பணியைச் செய்யவிடாமலும் நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தாலும்,கொலை மிரட்டல் விட்டனர் என்று 15 பேர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸ் என்பவரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவு ஆனதால் அவர்களைத் தேடி வருகின்றனர்.

நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...