உடுமலை அருகே சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தொழிலாளர்கள் ஊர்வலம்

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, உடுமலை வரதராஜபுரம் சுகுணா புட்ஸ் தீவன ஆலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி.



திருப்பூர்: உடுமலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலம் நடந்தது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு உடுமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், குடிமங்கலம் எஸ்.ஐ ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தீவன ஆலை மேலாளர் குணசேகரன் வரவேற்பு அளித்தார்.

இதில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம், குடிமங்கலம், நால்ரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. தீவன ஆலை தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...