பொள்ளாச்சி மயானப் பாதை பிரச்சினை - இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயானத்திற்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆற்றுத் தண்ணீரில் இறங்கி தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியது.



கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோவிந்தனூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்தக் கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இங்கு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் சேறும் சகதியுமாக உள்ள நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், இறந்துபோன ராமசாமியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சேறும், சகதியும் உள்ள முட்புதர்களால் சூழ்ந்துள்ள ஆற்றைக் கடந்து சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை இப்படித்தான் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இறந்தவர்களின் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்றுதான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம், கோவிந்தனூர் கிராம மக்கள் மயானம் செல்லும் பாதையில் ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இதனிடையே, இறந்தவரின் உடலை நீரில் ஆற்றைக் கடந்து உறவினர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...