மேட்டுப்பாளையம் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா - பரபரப்பு!

கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக கட்டிட வரைபட அனுமதி வழங்குவதாக குற்றம்சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் ஒருவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சியில் மாதாந்திர மன்றக் கூட்டம் நடைபெற்றது. மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 23 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு, விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருதூர் ஊராட்சியில் இதுவரை 46 பேருக்கு மன்ற ஒப்புதல் இன்றி ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு கட்டிட வரைமுறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறி கவுன்சிலர் ரங்கநாதன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனி ஒருவனாக அமர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அவர், தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.

போராட்டம் குறித்து காரமடை காவல்துறை அதிகாரிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் அளிக்கபட்டது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கட்டிட வரைபட அனுமதி சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் புகாராக எழுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் ரங்கநாதன் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...