'மேட்டுப்பாளையம் அருகே கல்குவாரிக்கு அனுமதிக்க கூடாது..!' - நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எச்சரிக்கை

காரமடை நகராட்சி பகுதியில் குடியிருப்பு அருகே புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என நகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க, திமுக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, குவாரிக்கு அனுமதி வழங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் வார்டு கவுன்சிலர்கள் 27 பேர் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் 21 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.



அப்போது, காரமடை நகராட்சி எத்தப்பன்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்க நடத்த கருத்துகேற்பு கூட்டத்தினை காரமடை நகராட்சி பகுதியில் வைக்காமல் அருகில் உள்ள கிராமமான மருதூர் கிராமத்தில் வைத்து நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் அதிமுக, திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகவும், பொதுமக்கள் ஏற்கனவே வாழ்ந்து வரும் எத்தப்பன்நகர் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டால் அங்கு மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். குவாரியில் வெடி வைத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுவதுடன் பொதுமக்களின் தலையில்தான் அந்த கல் விழும் என்ற நிலையில் ஏன் காரமடை நகராட்சி நிர்வாகம் அதனை அனுமதிக்கிறது?



பொதுமக்களின் நலன் கருதி சர்ச்சைக்குரிய கல்குவாரியை அங்கு அமைக்க நகராட்சி தரப்பில் எந்த அனுமதியும் வழங்க கூடாது என பா.ஜ.க, அதிமுக மற்றும் சில திமுக கவுன்சிலர்கள் தங்களது ஆட்சேபனைகளை காரசாரமாக தெரிவித்தனர். ஆனால், இதனைக் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் கண்டுகொள்ளாமல் கடைசி வரை மெளனம் காத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த கல்குவாரி எதிர்ப்பு கவுன்சிலர்கள், குவாரி அமைக்க நகராட்சி அனுமதி கொடுத்தால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...