பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டம் - 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சிக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொது சுகாதாரம் சார்பில் சுகாதார சீர்கேடு மற்றும் கசடுகள் அடைப்பு குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க அவசர கால தொடர்பு எண் (toll free number) 14420 உருவாக்கம் செய்வது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளையும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் தேவைக்கு சுத்திகரிக்கப்படும் குடிநீர், மழைக்காலங்களில் உப்பாற்றில் தண்ணீர் எடுக்கும்பொழுது நுகர்வுத் தன்மை மாறிவருவதால் அந்த இடத்தில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கும் பம்ப் ஆழியார் அணையையொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...