திருப்பூர் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விரைவில் மின்உற்பத்தி - மாநகராட்சி மேயர் பேச்சு!

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் விரைவில் மின்சாரம் தயாரிக்கப்படும் என கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இதற்கு காரணமாக இருந்த மேயர் மற்றும் ஆணையர், அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகமே திருப்பூரில் நடந்த பொங்கல் திருவிழாவை திரும்பி பார்த்துள்ளது.

மேலும், பதவி உயர்வுபெற்று கலெக்டராக பொறுப்பேற்க உள்ள மாநகராட்சி கமிஷனருக்கு பாராட்டுகள். சென்னை பெருநகர்மன்ற கூட்டத்தில் ம.தி.மு.க. கவுன்சிலர், மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பேரில், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், 4-வது குடிநீர் திட்ட பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது. 13 குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் மாநகராட்சி வடக்கு பகுதிகளில் முதற்கட்டமாக நீரேற்ற திட்டமிடப்பட்டது. இதில், 3 நீர்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மாநகராட்சியில் 1-4-2018 அன்று முதல் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பூ மார்க்கெட் பகுதிகளில் காலியாக உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கலாம் என பலரும் தெரிவித்தனர்.

ஆனால், அந்த பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். அதனை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தலாம். மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளை திறம்பட செய்து வருகிறோம். இதில், திடக்கழிவு மேலாண்மை மூலம் நுண்ணுயிர் தயாரித்து வருகிறோம். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...