உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிகல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பிறப்பு மற்றும் 18 வயது உடைய குழந்தைகளுக்கு உதவி செய்தல், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.



இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாத பராமரிப்பு தொகை பெற பரிந்துரை செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பதிவு செய்தல், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை மருத்துவமும் பார்க்கப்பட்டன.

இந்த முகாமில் அனைத்து வகை மருத்துவர்களும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...