மேட்டுப்பாளையம் அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு - மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா!

மேட்டுப்பாளையம் அடுத்த எத்தப்பன் நகரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிய கல்குவாரி அமைக்க தடை விதிக்க கோரி காரமடை நகராட்சி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா போராட்டம்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள கரியமலை பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கரியமலை பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் துவங்கி உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்குவாரி அமைக்கபட்டால் குடியிருப்புகள் சேதம் அடையும் என்றும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக அந்த கல்குவாரி அமைய நகராட்சி அனுமதிக்க கூடாது எனக்கூறி பாஜகவினர் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் ராகவன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதையடுத்து அங்கு வந்த காரமடை போலீசார், பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...