மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு - 7 ஆயிரம் கி.மீ., சைக்கிள் ஓட்டி 50 வயதான பிரான்ஸ் பெண் சாதனை!

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


கோவை: பிரான்சின் டூலோன் நகரில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி புறப்பட்ட நதாலி மாஸ் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார்.



பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்தார். உளவியலாளரான நதாலி, ‘மண் காப்போம்’ இயக்கத்திற்காக சத்குரு தனிநபராக மேற்கொண்ட 30,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தான் தனது இந்த பயணத்திற்கான உத்வேகம்” என்று கூறினார்.

மேலும், இது தொடர்பாக அவர் பேசுகையில், “நான் சத்குருவை சுவிட்சர்லாந்திலும், பாரிஸிலும் அவர் மண் காப்போம் பயணத்தில் இருந்த போது பார்த்தேன். அவரின் செயல்களைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். அத்துடன் நமது மண்ணின் பலவீனமான நிலையை நான் உணர்ந்தேன். அந்த நிமிடம் வரை நான் அதை அறிந்திருக்கவில்லை.

உலகளவில், 52% விவசாய நிலங்கள் நிலம் மற்றும் மண் சிதைவினால் பாதிக்கப்பட்டுள்ளன. மண் அழிவு உலகெங்கிலும் உள்ள 3.2 பில்லியன் மக்களை எதிர்மறையாக பாதிக்கிறது என UNCCD அமைப்பும், பூமியின் மேல் மண்ணில் 90 சதவீதம் 2050 ஆண்டிற்குள் ஆபத்தில் இருக்கும் என FAOஅமைப்பும் எச்சரித்துள்ளது.

மண் காப்போம் இயக்கம் கூறுவதை போல விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது மண் வளம் பெற்று விவசாயம் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறும். உலகளாவிய உணவு நெருக்கடியையும் தவிர்க்க முடியும். எனவே, நமது அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான சட்டங்கள் மற்றும் புத்துயிர் அளிக்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்” என கூறினார்.

உலக அளவில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்ற மண் காப்போம் இயக்கம், ஐ.நா. வின் 9 அமைப்புகள் மற்றும் உலக உணவுத் திட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. மண் அழிவை தடுக்கும் தீர்வுகளை முன்வைக்கும் இத்திட்டம், மண் வளத்திற்கான உறுதியான கொள்கைகளை நிறுவுவதில் அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.



தலாய் லாமா, ஜேன் குட் ஆல், ட்ரெவர் நோவா, ஜோ ரோஜென், மார்க் வால்ல்பெர்க் மற்றும் டிடியர் ட்ரோக்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மண் காப்போம் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.



இதுவரை மண் காப்போம் இயக்கம் 3.91 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...