மதுகுடிப்பதை கண்டித்த குடும்பம் - கோவையில் கூலித்தொழிலாளி தற்கொலை

கோவை பிச்சனூர் பகுதியில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி, மகன்கள் கண்டித்ததால் மனமுடைந்த கூலித் தொழிலாளி சாணிப் பவுடரைக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பிச்சனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். கூலி வேலை செய்து இவர் மதுவுக்கு அடிமையாகி நாள்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, அவரின் மனைவி மற்றும் மகன்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நாகராஜின் மனைவி மற்றும் மகன்கள் வேலைக்குச் சென்று சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய மனைவி, வீட்டில் மதுபோதையில் இருந்த நாகராஜ், சாணி பவுடர் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நாகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...