2023-24 மத்திய பட்ஜெட் - கோவை அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு வரவேற்பு!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறை மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் முன்மொழிவுகளை வரவேற்பதாக அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் அறிக்கை.



கோவை: 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI)-ன் தலைவர் டி. ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியா @100 (2047ல் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவிற்கான) வலுவான அடித்தளத்தை அமைக்கும் நடைமுறை மற்றும் எதிர்காலம் சார்ந்த பட்ஜெட் இது.

உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தை ‘பிரகாசமான நட்சத்திரமாக’ அனைவரும் அங்கீகரித்து வருவதையும், உலகின் அனைத்து முக்கியப் பொருளாதாரங்களில் நமது பொருளாதார வளர்ச்சி மிக உயர்ந்ததாக (7%) கருதப்படுகிறது என்றும் அப்போது அவர்,

இந்தியப் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஜவுளித் துறையின் சீரான வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் மற்றும் நல்ல கொள்கைகளை மேற்கொண்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி.

கிளஸ்ட்டர்-அடிப்படை மற்றும் வால்யு செயின் அடிப்படையில் பொது, தனியார் கூட்டாண்மை மூலம் கூடுதல் நீளமான ஸ்டேபிள் பருத்தியின் உற்பத்தித்திறனை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தும் அரசின் அணுகுமுறை பாராட்டிற்குரியது.இந்த திட்ட அறிவிப்பின் முழு விவரங்களை ஜவுளிதுறை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

கிராமப்புறங்களில் இளம் தொழில் முனைவோர்களால் விவசாயம் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் ஆக்சிலரேட்டர் நிதியை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திரு.ராஜ்குமார் வரவேற்றார். இது புதுமையான மற்றும் மலிவு தீர்வுகள், விவசாய நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும். புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விவசாயப் பொருட்களின் தரவு சேகரிப்பு சிறந்த பயிர் மதிப்பீட்டிற்கும் பருத்தி விலையை கணிக்கவும் உதவும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பசுமையான தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கி முன்னேறும் பசுமை வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு பாராட்டு.

இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்த 39,000 க்கும் மேற்பட்ட இணக்கங்களை நீக்குதல் மற்றும் 3400 சட்ட விதி மாற்றங்கள் செய்த நடவடிக்கைகளைக் குறிப்பிடுவதில் தொழில்துறை மகிழ்ச்சி. இருப்பினும், CITI ஆனது பருத்தி மற்றும் பருத்தி கழிவுகள் மீதான 10% இறக்குமதி வரியை நீக்குவதற்கு முன்மொழிந்தது.

அதாவது 5% BCD & 5% AIDC, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து வகையான ஜவுளி இயந்திரங்களுக்கும் 5% இறக்குமதி வரியைத் தக்கவைத்துக்கொள்வது, அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய தங்களை நிலைநிறுத்தும்வரை மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான இன்வெர்ட்டட் வரி கட்டமைப்பை ரத்து செய்யும் வரை ஜவுளி இயந்திரங்களின் இறக்குமதி வரியை 7% ஆக அதிகரிப்பது இந்தத் துறையில் திட்டமிடப்பட்டுள்ள புதிய முதலீடுகளை பாதிக்கும் என தொழில்துறை கவலை கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...