கோவை சூலூரில் பெட்டிக்கடையில் அரசு மதுபானம் விற்பனை - லாரி ஓட்டுநர் எடுத்த வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் சூலூரில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்துவந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசு மதுபானங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளபாளையம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் பெட்டி கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோக்கள் பரவிவந்தது.



அதிலும் குறிப்பாக லாரி ஓட்டுநர் ஒருவர், பெட்டி கடையில் மதுபானம் விற்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இது வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, பாப்பம்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து வந்த சுவாமிநாதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெட்டிக்கடைக்குள் வைத்து அந்த வழியாக செல்லக்கூடிய வட மாநில நபர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...