வண்ணமயமான ஓவியங்களால் அழகாகும் கோவை மேம்பாலங்கள்- சுவரொட்டிப் பிரச்சனைக்குத் தீர்வு?

கோவையில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்த இடங்களில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் சமீபகாலமாக சுவரொட்டிகள் ஒட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாநகரில் அரசுக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகளையும் மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

பலமுறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிக்கைகள் கொடுக்கப்பட்ட போதிலும், அரசியல் கட்சியினர் தொடர்ந்து சுவரொட்டிகளை ஒட்டிவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.



இந்த நிலையில், இதைத் தடுக்கும் நோக்கில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் உள்ள சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, அதில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



இயற்கை சார்ந்த ஓவியங்கள்,பொற்கால ஒவியங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படம், தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் உள்ளிட்டவை ஓவியங்களாக வரையப்பட்டுவருகின்றன.

கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் பணியை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...