கோவையில் கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது, மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்துவந்த 2 பேரை கைது செய்த போலீசார், ரூ.6.50 லட்சம் பணம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் தலைமையிலான காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த வினோத்குமார் மற்றும் அருண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள், 60 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாலன், பிரதீப், பிரபு உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...