உடுமலை அரசு மருத்துவமனையில் மூலிகை செடிகள் நடவு - மழை உடுமலை அமைப்பு பங்கேற்பு

‘மழை உடுமலை’ என்ற அமைப்பின் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில், “மழை உடுமலை” அமைப்பின் சார்பில் பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...