உடுமலை அருகே தனியார் பள்ளியில் விளையாட்டு விழா - மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய டி.எஸ்.பி!

உடுமலை என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி தேன்மொழிவேல் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

உடுமலையில் செயல்பட்டு வரும் என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடத்தப்பட்டது. என்.வி., கல்விக் குழும தலைவர் வெங்கட் ராமன், செயலாளர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவ மாணவவிகள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, கடந்த 10, 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குடிமங்கலம் காவல் ஆய்வாளர் ரோஸ்லின், பள்ளி முதல்வர் அன்னபூரணி, உடற்கல்வி ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...