2023-24 பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் - கோவை தொழில் அமைப்புகள் கருத்து!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024க்கான பட்ஜெட் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட் என கோவை தொழில் அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.



கோவை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், கோவை மாவட்ட தொழில் அமைப்பினர் மத்திய பட்ஜெட் இந்திய நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என கருத்து தெரிவித்துள்ளனர்.



இந்திய தொழில் வர்த்தக சபை (ICCI)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தேர்தலுக்கான அறிக்கை. விவசாயம் மற்றும் சிறுதானிய உற்பத்திக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. கொரோனா காலத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

அரசு உத்தரவாத கடன்களுக்கு என 2லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. தனிநபருக்கான வரிசலுகை குறைப்பு. டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் ஊக்குவிக்க நடவடிக்கை. ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற உதவி அளிக்கப்படுமென்ற அறிவிப்பு.

மாங்குரோவ் காடுகள் வளர்க்க நடவடிக்கை. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல தொழில் துவங்க பல்வேறு அமைப்புகள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை. மாநில தலைநகரங்களில் உற்பத்தி செய்யபட்ட பொருட்கள் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய மால் அமைக்க நடவடிக்கை போன்ற அறிவிப்புகளையும் வரவேற்பதாக இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, ரோபொ தொழில்நுட்பங்களுக்கு மூன்று மையம் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில், ஒரு மையத்தை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடந்த பட்ஜெட்டில் கூறபட்ட அம்சங்கள் நடைமுறை நடவடிக்கைகள் குறித்த புள்ளியல் தகவல்கள் இல்லை என்று இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

மக்கள் செய்யும் செலவிற்கேற்ப நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்த அவர்கள், மூலப்பொருள்கள் விலையேற்றம் குறித்த அறிவிப்பேதும் இல்லை என்பது ஏமாற்றமே என்று கூறினார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், நாம் கேட்டது எல்லாம் கிடைக்காது ஆனால் இந்த பட்ஜெட் திருப்தியானது என்றுள்ளது.

இந்திய தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு

தனிநபர் வருமான வரிகுறைப்பு, இறக்குமதிக்கான சலுகைகள், விவசாய உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு என அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் இந்திய மக்களுக்கான, நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று இந்திய தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் என்றாலும் ஜவுளித்துறைக்கு என எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை என்பது ஏமாற்றமே. ஆனால் இதோடு நின்றுவிடுவதில்லை. மேலும், தொடர்ந்து மத்திய அமைச்சர் மற்றும் நிதியமைச்சரை சந்தித்து பிரச்சனைகள் குறித்து வலியுறுத்த உள்ளதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவிசாம் தெரிவித்தார்.

நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கான கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என எதிர்பார்த்தும் எந்த பலனும் இல்லை என்றும் ரவிசாம் கூறினார். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்திக்கு உரிய விலை இல்லை. எங்கள் எதிர்பார்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

சிறுகுறு தொழில் முனைவோர் சங்கம்

பட்ஜெட் குறித்து பேசிய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பேசுகையில் வெற்று பட்ஜெட் என குற்றம்சாட்டினார். பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான சலுகைகள், வரி குறைப்பு செய்துள்ளனர். ஆனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் முதல் ராணுவ உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சலுகை மற்றும் வரி குறைப்பு குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஒரு கார்பரேட் பட்ஜெட். சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் பட்ஜெட்டாக இது இல்லை.

மக்களிடமே வசூலித்து மக்களுக்கே செலவு செய்யும் பட்ஜெட், உள்நாட்டு தொழில்களுக்கான சரியான வழிகாட்டுதலுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அழகான பட்ஜெட்டாக காணப்பட்டாலும் விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இல்லை. வேளாண்மைக்கு என கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் எவ்வாறு பயன்படும் என்பதும் தெரியவில்லை, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...