உக்கடத்தில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் - சுவிஸ் குழுவுடன் கோவை மேயர் ஆய்வு!

உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து சுவிஸ் வளர்ச்சி நிறுவன குழுவுடன் மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையர் பிரதாப் ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் சோலார் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து சுவிஸ் வளர்ச்சி நிறுவன குழுவுடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் பேனல் உற்பத்தி நிலையம் அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, சுவிஸ் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் தூதா கிறிஸ்டியன் ஃப்ரூட்டிகர் மற்றும் குழுவினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.



மேலும், சுவிட்சர்லாந்து தூதரகம் இந்தியாவின் 8 நகரங்களை தேர்வு செய்து கெப்பாசிட்டீஸ் திட்டத்தை (Capacities Project)செயல்படுத்தி வருகிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நிருநெல்வேலி நகரங்களை தேர்வு செய்துள்ளது.

அதேபோல் அகமதாபாத், பரோடா, ராஜ்கோட், உதய்பூர் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களையும் தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் பகுதியில் கோவை மாநகராட்சியில் 1.5 டன் அளவு கொண்ட பயோ கேஸ் திட்டம் சுவிட்சர்லாந்து தூதரக நிதியுதவியின் கீழ் பாரதி பார்க் மாநகராட்சி வாகன பணிமனையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு அளவிடும் கருவிகள் கோவை மாநகராட்சியின் மூன்று இடங்களில் (மாநகராட்சி பிரதான அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா வாட்டர் டேங்க்) நிறுவப்பட்டுள்ளது.

(CapaCITIES Project) கெப்பாசிட்டீஸ் திட்டத்தின் 2வது பகுதியில் கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் 140 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய ஒளி உற்பத்தி நிலையம் அமைத்திட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் சார்பில் 50 சதவீத நிதியுதவியும், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 50 சதவீத நிதியுதவியும் பெற்று திட்டத்தினை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இக்கூட்டத்தில், இந்தியா மற்றும் பூட்டானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணை தலைவர் அமைச்சர் ஆலிவர் பிங்க், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தலைமை பிரிவு ஜனைன் குரிகர், இந்தியா மற்றும் நேபால் நிகழ்ச்சியின் மேலாளர் மார்க்கோ ஆண்ட்ரியூ, ஆலோசகர் மற்றும் கூட்டுறவு தலைவர்கள் ஜொனாதன் டெமெங்கே, கொரின் டெமெங்கே. ஆலோசகர் ஷஞ்சி தாஸ்குப்தா, சௌமியா சதுர்வேதுலா, மெகுல் பட்வாரி, மாநகராட்சி துணை செந்தில் பாஸ்கர், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...