'திருமணமான பெண்களும் பிடித்த துறையில் சாதிக்கலாம்..!' - தென்னிந்திய அழகி பட்டம் வென்ற கோவை மருத்துவர் அறிவுரை

டெல்லியில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் கோவையைச் சேர்ந்த மருத்துவர் அபிராமி தென்னிந்திய அழகிக்கான பட்டம் வென்று அசத்தல்.



கோவை: டெல்லியில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் கோவையைச் சேர்ந்த மருத்துவர் அபிராமி, தென்னிந்திய அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த (MIQH) நிறுவனம் திருமணமானப் பெண்களுக்கான அழகி மற்றும் ஆண்களுக்கான அழகன் போட்டியினை கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடத்தியது. இதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.



இதில் கோவையைச் சேர்ந்தவரும், மருத்துவருமான அபிராமி தென்னிந்தியத் திருமணமானவர்கள் பிரிவில் அழகி பட்டம் வென்று அசத்தியுள்ளார்.



கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த அபிராமி, அதே பகுதியில் தோல் சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.



முக அலங்காரத்தில் ஆர்வமிக்க அபிராமி, மருத்துவராக இருந்தாலும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் கண்டிருக்கிறார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் அபிராமி கூறியதாவது:



மருத்துவராக இருந்தாலும் தான் பணியாற்றும் தோல் மருத்துவம் துறையுடன் இணைந்து வருவது தான் அழகுக்கலையும். தனக்கு அழகுக்கலையிலிருந்த ஆர்வமே தன்னை அழகிப்போட்டியில் கலந்துகொள்ளத் தூண்டியது.

திருமணமான பெண்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்க வேண்டுமென்பது அல்ல, தங்களுக்கு பிடித்தமான துறையில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினரும் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

தனக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில் மருத்துவ பணியைச் செய்து கொண்டு பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் உடற்பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு பின்பற்றியதோடு அல்லாமல் தனக்கான தனித்திறனையும் வளர்த்துக் கொண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளேன்.

பெண்கள் யாராக இருந்தாலும் தங்களுக்கான திறமைகளை வளர்த்துக்கொண்டால் அதுவே அவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும். சமூக வலைத்தளங்களில் குறைந்த நாட்களில் முகப்பொலிவு, முக அழகு பெறலாம் என்ற வீடியோக்கள் வருவது என்பது மருந்துகள் உபயோகப்படுத்த ஒரு விளம்பரமே, முகத்தில் உள்ள ஒரு கரும்புள்ளியை நீக்கவே சில மாதங்கள் ஆகும்.

ஆனால் குறைந்த நாட்களில் முகம் அழகு பெறும் என்பது சாதியமற்றது. இதுபோன்ற வீடியோக்களில் வரும் தகவல்களைப் பின்பற்றினால் அதுவே உங்களது தோலுக்கும் அழகிற்கும் ஆபத்தாக அமையும், என்று எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...