உடுமலையில் உலக ஈர நில நாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழாவில், நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்றார். துணை இயக்குநர் தேஜஸ்வி விழாவிற்கு தலைமை தாங்கினார்.



அதனைத் தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் அவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நிகிலேஷ் மற்றும் டாக்டர். அருண் வெங்கடேசன் கலந்துகொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...