கோவை வனத்துறை சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம்

உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம். ஈரநிலத்தின் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வு.



கோவை: கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம் ராமசுப்பிரமணியம், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தாழிப் பனை மரக்கன்றுகள் குளத்தின் கரையில் நடப்பட்டன. பின்னர் மாணவர்களிடையே ஈர நிலங்களைப் பாதுகாப்பு குறித்து அலுவலர்களால் உரை வழங்கப்பட்டது. ஈர நில தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலக வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.



ஈர நிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



ஈரநில நண்பர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியதோடு உலகில் உள்ள ஈர நிலங்களைக் காக்கும் பொருட்டு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மற்றும் CUBE அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனச்சரக அலுவலர்கள் மற்றும் மதுக்கரை வனச்சரக வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...