உடுமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் - காவல்துறை கவனிக்குமா?

உடுமலையிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து படிகளிலேயே பயணம் செய்வதால் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் படிகளிலேயே பயணம் செய்து வருவதால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல வெளியூர்களுக்குச் சென்று படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்துகள் மூலமே பயணம் செய்கின்றனர்.



இதனால் தினசரி காலை வேளையில் உடுமலை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இங்கிருந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்துகள், காலியாக செல்லும் நேரங்களிலும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு வரை தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்களை போலீசார் பலமுறை கண்டித்தும் அவர்கள் அதனை அலட்சியம் செய்கின்றனர். மாணவர்கள் என்பதால் போலீசார் ஒரு எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நிர்வாகம் மீதும் போலீசாரும், போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...