பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரிக்கை

உடுமலை அருகேயுள்ள பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: பெரியவாளவாடியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வரும் பெரிய வாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியவாளவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ஆனால் பிரசவம், விபத்து போன்ற தருணங்களில் அவசர கால சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெரியவாளவாடியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்குச் சிகிச்சைக்காக வருகின்றனர். சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்குச் சிகிச்சையும், முதலுதவியும் அளிக்கப்படுகிறது. பிரசவமும் நடைபெற்று வருகிறது.

ஆனால் பிரசவத்தின் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கிருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. எனவே பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.

அத்துடன் மருத்துவமனைக்கு அருகே உள்ள காலி இடத்தில் அறுவைசிகிச்சை அரங்குடன் கூடிய கட்டிடத்தைக் கட்டுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...